Guru Granth Sahib Translation Project

guru granth sahib tamil page-2

Page 2

ਗਾਵੈ ਕੋ ਵੇਖੈ ਹਾਦਰਾ ਹਦੂਰਿ ॥ யாரோ ஒருவர் இவரைத் தன்னுள் ஒருவராக உணர்ந்து, அவருடைய மகிமைகளை பாடுகிறார்.
ਕਥਨਾ ਕਥੀ ਨ ਆਵੈ ਤੋਟਿ ॥ பலர் அவரது புகழை எடுத்துரைத்தாலும், அதற்கு முடிவென்பதே இல்லை
ਕਥਿ ਕਥਿ ਕਥੀ ਕੋਟੀ ਕੋਟਿ ਕੋਟਿ ॥ லட்சக்கணக்கான ஜீவன்கள் அவரது குணங்களை விவரித்தாலும், அவரது உண்மையான ஸ்வரூபத்தை அறிந்து கொள்ள முடியவில்லை
ਦੇਦਾ ਦੇ ਲੈਦੇ ਥਕਿ ਪਾਹਿ ॥ அகால புருஷர் ஒரு நன்கொடையாளர், ஜீவன்களுக்கு (ஓயாது) பொருள் தருபவர், (ஆனால்) ஆன்மா அதை எடுப்பதில் சோர்வடைகிறது
ਜੁਗਾ ਜੁਗੰਤਰਿ ਖਾਹੀ ਖਾਹਿ ॥ எல்லா ஜீவன்களும் காலங்காலமாக இந்த பொருட்களை அனுபவித்து வருகின்றன.
ਹੁਕਮੀ ਹੁਕਮੁ ਚਲਾਏ ਰਾਹੁ ॥ (முழு படைப்பின்) பாதை முழுவதும் கட்டளையிடும் நிரங்கரின் விருப்பத்தால் மட்டுமே பின்பற்றப்படுகிறது.
ਨਾਨਕ ਵਿਗਸੈ ਵੇਪਰਵਾਹੁ ॥੩॥ ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி, பிரபஞ்சத்தின் ஜீவன்களை எச்சரிக்கும் போது கூறுகிறார், அந்த நிரங்கர் (வாஹிகுரு) எப்பொழுதும் (இந்த உலக ஜீவன்களின் மீது) கவலையில்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறார்.
ਸਾਚਾ ਸਾਹਿਬੁ ਸਾਚੁ ਨਾਇ ਭਾਖਿਆ ਭਾਉ ਅਪਾਰੁ ॥ அகால் புருஷ் (நிரங்கர்) தனது சத்தியத்தின் பெயரால் சத்யமாகவே இருக்கிறார், அவரை நேசிப்பவர்கள் மட்டுமே (சத்யம் மற்றும் சத்தியத்தின் பெயரைக் கொண்டவர்) எல்லையற்றவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
ਆਖਹਿ ਮੰਗਹਿ ਦੇਹਿ ਦੇਹਿ ਦਾਤਿ ਕਰੇ ਦਾਤਾਰੁ ॥ (அனைத்து தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகள் முதலிய ) ஜீவராசிகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றனர், கேட்டுக்கொண்டே இருக்கின்றனர், (பொருள்ககளை) எடுத்துக்கொண்டே இருக்கின்றனர், அதை கொடுக்கும் (பரமாத்மா) அனைவருக்கும் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.
ਫੇਰਿ ਕਿ ਅਗੈ ਰਖੀਐ ਜਿਤੁ ਦਿਸੈ ਦਰਬਾਰੁ ॥ (மற்ற மன்னர்கள் மகாராஜாக்களை காண அவர்கள் முன் சிலபரிசுகளை எடுத்துச் செல்வது போல) அந்த பரிபூரண பரமாத்மாவை காண அவரின் கதவிருக்கு முன்பாக என்ன பரிசு கொண்டு செல்ல வேண்டும் என்ற கேள்வி இப்போது எழுகிறது?
ਮੁਹੌ ਕਿ ਬੋਲਣੁ ਬੋਲੀਐ ਜਿਤੁ ਸੁਣਿ ਧਰੇ ਪਿਆਰੁ ॥ அந்த எல்லையற்ற சக்தியைக் (ஈஸ்வர்) கேட்பது போல, எங்களுக்கு அன்பு பிரசாதத்தை தரும்படி அவரை நாவால் எப்படி புகழ்வது)?
ਅੰਮ੍ਰਿਤ ਵੇਲਾ ਸਚੁ ਨਾਉ ਵਡਿਆਈ ਵੀਚਾਰੁ ॥ குரு மகராஜ் அவர்கள் இவவாறு தனது பதிலை விளக்குகிறார், அது காலை வேளையில் (அமிர்த வேளை) (ஒருவருடைய மனம் பொதுவாக உலகச் சிக்கல்களில் இருந்து விலகியிருக்கும் நேரத்தில்) அந்தப் அகால் புருஷரின் பெயரை சத்தியத்துடன் நினைவு கூர்ந்து அவனது மகிமையைப் பாடினால்தான் அவனுடைய அன்பை அடைய முடியும்.
ਕਰਮੀ ਆਵੈ ਕਪੜਾ ਨਦਰੀ ਮੋਖੁ ਦੁਆਰੁ ॥ (அவன் மகிழ்ச்சி அடைந்தால் நமது மீது கருணை கொள்வார்) வெறும் கர்மாவினால் தான் ஒரு ஜீவன் இந்த உடல் எனும் துணியில் மனிதப் பிறப்பைப் பெறுகிறது என்று குரு ஜி உரைக்கிறார். இதிலிருந்து முக்தி இல்லை, முக்தி வேண்டுமெனில் அவருடைய கருணை பார்வை நமக்கு தேவை.
ਨਾਨਕ ਏਵੈ ਜਾਣੀਐ ਸਭੁ ਆਪੇ ਸਚਿਆਰੁ ॥੪॥ ஹே நானக்! சத்தியத்தின் உருவமற்ற வடிவம் நிரங்கரே எல்லாமானவர் என்ற புரிதலை எடுத்துக் கொள்ளுங்கள், இதன் மூலம் மனிதனின் சந்தேகங்கள் அனைத்தும் அழிக்கப்படும்.
ਥਾਪਿਆ ਨ ਜਾਇ ਕੀਤਾ ਨ ਹੋਇ ॥ அந்த பரமாத்மாவை யாராலும் உறுதியான வடிவில் நிறுவ முடியாது, உருவாக்கவும் முடியாது.
ਆਪੇ ਆਪਿ ਨਿਰੰਜਨੁ ਸੋਇ ॥ அவனே மாயைக்கு அப்பாற்பட்டவன், அவனே தானே ஒளிர்பவன்.
ਜਿਨਿ ਸੇਵਿਆ ਤਿਨਿ ਪਾਇਆ ਮਾਨੁ ॥ அந்தக் பரமாத்மாவின் நாமத்தை நினைவு கூர்பவரை அவரது அரசவையில் மரியாதை செய்கிறார்
ਨਾਨਕ ਗਾਵੀਐ ਗੁਣੀ ਨਿਧਾਨੁ ॥ அந்த குணங்களின் களஞ்சியமான நிரங்கர் வணங்க வேண்டும் என்று ஸ்ரீ குருநானக் தேவ் ஜி கூறுகிறார்.
ਗਾਵੀਐ ਸੁਣੀਐ ਮਨਿ ਰਖੀਐ ਭਾਉ ॥ அவரைத் துதிக்கும்போதும், புகழைக் கேட்கும்போதும், உங்கள் இதயத்தில் அவர்மீது மரியாதை வைத்துக்கொள்ளுங்கள்.
ਦੁਖੁ ਪਰਹਰਿ ਸੁਖੁ ਘਰਿ ਲੈ ਜਾਇ ॥ இவ்வாறு செய்வதால் வீட்டில் துக்கங்கள் அழிந்து மகிழ்ச்சி தங்கும்.
ਗੁਰਮੁਖਿ ਨਾਦੰ ਗੁਰਮੁਖਿ ਵੇਦੰ ਗੁਰਮੁਖਿ ਰਹਿਆ ਸਮਾਈ ॥ குருவின் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தையானது வேத அறிவு, அந்த அறிவே எங்கும் நிறைந்து உள்ளது.
ਗੁਰੁ ਈਸਰੁ ਗੁਰੁ ਗੋਰਖੁ ਬਰਮਾ ਗੁਰੁ ਪਾਰਬਤੀ ਮਾਈ ॥ குரு தான் சிவன், விஷ்ணு, பிரம்மா மற்றும் அன்னை பார்வதி, ஏனெனில் குருவே உயர்ந்த சக்தி.
ਜੇ ਹਉ ਜਾਣਾ ਆਖਾ ਨਾਹੀ ਕਹਣਾ ਕਥਨੁ ਨ ਜਾਈ ॥ அந்த சற்குண ஸ்வரூப் பரமாத்மாவைப் பற்றி எனக்குத் தெரிந்தாலும், என்னால் அதைச் சொல்ல முடியாது, ஏனென்றால் அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
ਗੁਰਾ ਇਕ ਦੇਹਿ ਬੁਝਾਈ ॥ ஹே உண்மையான குருவே!எனக்கு விளக்கவும்
ਸਭਨਾ ਜੀਆ ਕਾ ਇਕੁ ਦਾਤਾ ਸੋ ਮੈ ਵਿਸਰਿ ਨ ਜਾਈ ॥੫॥ எல்லா உயிர்களுக்கும் ஒரே மாதிரி அளிப்பவனாக இருப்பவனை என்னால் மறக்கவே முடியாது. ॥5॥
ਤੀਰਥਿ ਨਾਵਾ ਜੇ ਤਿਸੁ ਭਾਵਾ ਵਿਣੁ ਭਾਣੇ ਕਿ ਨਾਇ ਕਰੀ ॥ தீர்த்த ஸ்நானம் கூட அவருக்கு விருப்பத்திற்கு ஏற்றதாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும். அந்தப் அகால புருஷரின் விருப்பம் இல்லாமல் யாத்திரை செய்து தீர்த்த ஸ்நானம் செய்து என்ன பயன்? ஏனென்றால், அது அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும்.
ਜੇਤੀ ਸਿਰਠਿ ਉਪਾਈ ਵੇਖਾ ਵਿਣੁ ਕਰਮਾ ਕਿ ਮਿਲੈ ਲਈ ॥ அந்த படைப்பாளியின் படைப்பில் நான் எந்த படைப்பை காணநேர்ந்தாலும், அதில், எந்த உயிரும் செயல்கள் இல்லாமல் எதையும் அடைவதில்லை, எதையும் பெறுவதில்லை.
ਮਤਿ ਵਿਚਿ ਰਤਨ ਜਵਾਹਰ ਮਾਣਿਕ ਜੇ ਇਕ ਗੁਰ ਕੀ ਸਿਖ ਸੁਣੀ ॥ உண்மையான குருவைப் பற்றிய ஒரே ஒரு அறிவைப் பெற்றால், மனித உள்ளத்தின் புத்தி ரத்தினங்கள், நகைகள், மாணிக்கங்கள் போன்ற பொருட்களால் நிரப்பப்பட்ட போன்றதாகும்.
ਗੁਰਾ ਇਕ ਦੇਹਿ ਬੁਝਾਈ ॥ குருவே! அதை எனக்கு உணர்த்துங்கள்
ਸਭਨਾ ਜੀਆ ਕਾ ਇਕੁ ਦਾਤਾ ਸੋ ਮੈ ਵਿਸਰਿ ਨ ਜਾਈ ॥੬॥ பிரபஞ்சத்தின் அனைத்து உயிரினங்களுக்கும் வடிவம் கொடுக்கும் நிரங்கரே என்னை மறந்துவிடாதீர்கள் ॥ 6 ॥
ਜੇ ਜੁਗ ਚਾਰੇ ਆਰਜਾ ਹੋਰ ਦਸੂਣੀ ਹੋਇ ॥ ஒரு மனிதன் அல்லது ஒரு யோகி, யோக-சாதனம் செய்வதன் மூலம், நான்கு யுகங்களை விட பத்து மடங்கு அதிகமான வயதை அடைகிறார், அதாவது நாற்பது யுகங்கள்.
ਨਵਾ ਖੰਡਾ ਵਿਚਿ ਜਾਣੀਐ ਨਾਲਿ ਚਲੈ ਸਭੁ ਕੋਇ ॥ அவரது புகழ் நவ்கண்டங்களில் இருக்கும் (எலாவ்ரித், கிம்புருஷ், பத்ரா, பாரதம், கேதுமால், ஹரி, ஹிரண்யா, ரம்யா மற்றும் குஷ் புராண நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள), அனைவரும் அவரைப் போற்றும் வகையில் இருக்க வேண்டும்.
ਚੰਗਾ ਨਾਉ ਰਖਾਇ ਕੈ ਜਸੁ ਕੀਰਤਿ ਜਗਿ ਲੇਇ ॥ உலகின் தலைசிறந்த மனிதராக ஆனதன் மூலம், அவர்தன் மகிமையை பாடிக்கொண்டே இருங்கள்
ਜੇ ਤਿਸੁ ਨਦਰਿ ਨ ਆਵਈ ਤ ਵਾਤ ਨ ਪੁਛੈ ਕੇ ॥ அந்த மனிதன் அகால் புருஷரின் கிருபையின் கீழ் வரவில்லை என்றால், அவனுடைய கருணையை கேட்க்கும் பாக்கியத்தை யாரும் பெற மாட்டார்கள்
ਕੀਟਾ ਅੰਦਰਿ ਕੀਟੁ ਕਰਿ ਦੋਸੀ ਦੋਸੁ ਧਰੇ ॥ இவ்வளவு பெருமையும் மரியாதையும் இருந்தும், அத்தகைய நபர் பூச்சிகளில் ஒரு குட்டிப் பூச்சியாகக் கருதப்படுகிறார், அதாவது கடவுளின் முன் மிகவும் தாழ்ந்தவர், தவறு செய்தவர் கூட அவரைக் குற்றவாளியாகக் கருதுவார்.
ਨਾਨਕ ਨਿਰਗੁਣਿ ਗੁਣੁ ਕਰੇ ਗੁਣਵੰਤਿਆ ਗੁਣੁ ਦੇ ॥ குரு நானக் ஜி அவர்கள் கூறுகிறார் அந்த எல்லையற்ற சக்தி நிரக்கற்ற நல்லொழுக்கமுள்ள மனிதர்களுக்கு நற்பண்புகளை அளித்து, நல்லொழுக்கமுள்ளவர்களை கூடுதல் நற்குணமுள்ளவர்களாக ஆக்குகிறது.
ਤੇਹਾ ਕੋਇ ਨ ਸੁਝਈ ਜਿ ਤਿਸੁ ਗੁਣੁ ਕੋਇ ਕਰੇ ॥੭॥ ஆனால் அத்தகைய மகிமை குணங்கள் நிரம்பிய பரமாத்மாவுக்கு வேறு எந்த குணங்களையும் அருளக்கூடியவர் என்று எவரும் இல்லை II 7 II
ਸੁਣਿਐ ਸਿਧ ਪੀਰ ਸੁਰਿ ਨਾਥ ॥ சித்தா, பீர், தேவ் மற்றும் நாத் போன்றவர்கள் பரமாத்மாவின் பெயரைக் கேட்பதால், அதாவது அவரது மகிமையை இதயத்தில் வைப்பதன் மூலம் மட்டுமே உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்.
ਸੁਣਿਐ ਧਰਤਿ ਧਵਲ ਆਕਾਸ ॥ அவரது பெயரை உச்சரிப்பதன் மூலம், பூமியின் சக்தி, அதைத் தாங்கும் ரிஷபா (புராண நூல்களின்படி, இந்த உலகத்தை அதன் கொம்புகளில் வைத்திருக்கும் தவுலா காளை) மற்றும் சொர்க்கலோகத்தின் நிலைத்தன்மை பற்றிய அறிவு ஒருவருக்கு கிடைக்கிறது.
ਸੁਣਿਐ ਦੀਪ ਲੋਅ ਪਾਤਾਲ ॥ அவரது பெயரை உச்சரிப்பதன் மூலம் ஷால்மலி, க்ரௌஞ்சா, ஜம்பு, பாலக் முதலிய ஏழு தீவுகள்: புஹ் பவா, ஸ்வாஹ் முதலிய பதினான்கு உலகங்கள் மற்றும் அடல், விட்டல், சுதல முதலிய ஏழு நரகங்களின் ரகசியங்களை அறியலாம்
ਸੁਣਿਐ ਪੋਹਿ ਨ ਸਕੈ ਕਾਲੁ ॥ அவரது பெயரை உச்சரிப்பவரை காலத்தால் கூட தொட முடியாது.
ਨਾਨਕ ਭਗਤਾ ਸਦਾ ਵਿਗਾਸੁ ॥ ஹே நானக்! பிரபுவின் பக்தனிடம் எப்போதும் ஆனந்த ஒளி இருக்கும்.
ਸੁਣਿਐ ਦੂਖ ਪਾਪ ਕਾ ਨਾਸੁ ॥੮॥ பரமாத்வாவின் திருநாமத்தைக் கேட்பதால் எல்லா துக்கங்களும் தீவினைகளும் அழிந்துவிடும்.॥ 8 ॥
ਸੁਣਿਐ ਈਸਰੁ ਬਰਮਾ ਇੰਦੁ ॥ சிவன், பிரம்மா, இந்திரன் முதலானோர் பரமாத்மாவின் பெயரைக் கேட்தாலையே உயர்ந்த நிலையை அடைய முடிந்தது.
ਸੁਣਿਐ ਮੁਖਿ ਸਾਲਾਹਣ ਮੰਦੁ ॥ அதாவது தீய செயல்களை செய்பவர்கள் மெதுவாக இவர் பெயரை காதுகளில் கேட்டாலே மனம் திருந்தி புகழின் உச்சியை அடைவார்
ਸੁਣਿਐ ਜੋਗ ਜੁਗਤਿ ਤਨਿ ਭੇਦ ॥ அவர் பெயருடன் உச்சரிப்பதன் மூலம் உடலின் யோகாதி மற்றும் விசுத்தம், மணிபூரகம், மூலதாரா போன்ற ஆறு சக்கரங்களின் ரகசியங்களை ஒருவர் அறிந்து கொள்கிறார்.
ਸੁਣਿਐ ਸਾਸਤ ਸਿਮ੍ਰਿਤਿ ਵੇਦ ॥ அவரது பெயரைக் கேட்பதன் மூலம், சாஸ்திரங்கள், (சாம்க்யம், யோகம், நியாயம் முதலியன), இருபத்தேழு ஸ்மிருதிகள் (மனு, யாஜ்ஞவல்கய ஸ்மிருதி முதலியன) மற்றும் நான்கு வேதங்களின் ஞானம் அடையப்படுகிறது.
ਨਾਨਕ ਭਗਤਾ ਸਦਾ ਵਿਗਾਸੁ ॥ ஹே நானக்! புனிதர்களின் இதயங்களில் எப்போதும் மகிழ்ச்சி ஒளி இருக்கும்.


© 2017 SGGS ONLINE
error: Content is protected !!
Scroll to Top